Vijaya Pathipagam

Vijaya Pathipagam
Sort By:  
  •  Back to: நாவல் கை வீசம்மா கை வீசு
    கை வீசம்மா கை வீசு ()
    அடிபட்டு பத்தினியாய் இருப்பதைவிட சுதந்திரமாய் தேவடியாளாக இருப்பது மேல்" என்கிறார் கும்பகோணம் டீச்சர், இது பெண் ஆண் மீது உமிழ்ந்த வெறுப்பு எச்சில், அடக்கி ஆளும் ஆணின் மீது  கொண்ட ஆங்காரம், நேசமாய் பார்க்கும் போது அவனின் கால்களில் சரணாகதியாக கிடக்கும் பெண் தன்னை ஒடுக்கும் போது  மரபு நாசமாக போகட்டும் என்று சபிப்பதில் ஆச்சர்யம் இல்லை" என்பதை இந்த நாவலில் உணர்வு வலைகளை கொண்டு பின்னியிருக்கிறார் ஆசிரியர்
  • எல்லாம் உனக்காக
    எல்லாம் உனக்காக ()
    ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அபாயம் ஏற்படலாம் என்பதை கதையில் சொல்லுகிறார். பிரச்சினைகள் இல்லாத வாழ்வு என்ற ஓன்று இல்லை .அதை சமாளித்து அடுத்த கட்டம் செல்லுவதில்தான் அவர்களின் திறமை இருக்கு ஆக போராட்டம் நிறைந்ததுதான் வாழ்வு என்று சொல்லுகிறார்.
  • எழில் ()
    மனித மனங்களின் அலைதலையும் ,திசை மாறுதலையும் மிக துல்லியமாக பல கதாபாத்திரங்களின் வழியாக சொல்லுகிறார், கணவனை நோகாமல் வைத்துகொள்ள துடிக்கும் மனைவியின் அக்கறை, அடுத்தவன் கதையை திருடி தான் புகழ் அடையும் ஒருவன், கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு கனவுகளோடு வரும் இளைஞன் கனவை நனவாக்குகிறானா? சிதறடிக்கிறானா? என்று வாழ்வின் போராட்டங்களை வெகு நேர்த்தியாக காட்டும் கதை.
  • அன்புக்குப் பஞ்சமில்லை ()
    ஒரு படைப்பாளி எப்போது நிறைவு பெறுகிறான் என்றால் ,அவனின் படைப்பை உணர்ந்து கொண்டு வாசகன் அந்த வழியில் செல்லும் போதுதான் அப்படி பல வாசகர்களை ஆசிரியருக்கு பெற்றுகொடுத்த அற்புதமான கதை இது. எதார்த்த உலகில் நிறைவேறாத ஆசைகளாக வரும் கனவை ஒரு மாணவனின் கனவோடு ஒப்பிட்டு  கூறும் இவரின் சிந்தனை நம்மை உற்றுநோக்க வைக்கிறது உலகின் எல்லைகளை தொட்டுப் பார்க்க வைக்கிறது.
  • என்றென்றும் அன்புடன் ()
    உயர்த்திய ஊர் மக்களின் சிரமங்களையும் மையமாக கொண்ட கதை படிக்கும் போதே பல உண்மை செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டாவது நாவல் இரண்டாவது கல்யாணம் இந்த நாவல் சமுகத்தின் எதார்த்த உலகை அப்பட்டமாக காட்டுவதாக  அமைந்திருகிறது. கணவன் சரியில்லாதபோது குழந்தையோடு இருக்கும் ஒரு பெண் எத்தனை துயரத்திற்கு ஆளாகிறாள் என்பதை வெளிப்படையான பல விசயங்களை மனம் திறந்து கூறும் ஆசிரியரை பாராட்ட வேண்டும்.
Per Page      1 - 10 of 1449

Powered by Abantecart eCommerce Solution